நீயும் நானும்
காதலர்கள்...
இப்பொழுதும்
ஒரே ஊரில்
வசிக்கிறோம்....
நம் திருமணம்
ஒரே ஊரில்
ஒரே மண்டபத்தில்
ஒரே நாளில்
ஒரு வருடம்
முன்பு உனக்கும்
பிறகு எனக்கும்
நடந்தது....
நீயும்
நானும்
மகிழ்ச்சியாக
இருப்பதாக
ஊர் மக்கள்
சொல்லுகிறார்கள்.....
நம்
துயரங்களை மட்டுமே
அறிந்திருந்த ஊருக்கு
நம் மகிழ்ச்சியை
தெரிவித்தது சரியா
தவறா என்பது
ஒவ்வொரு முறையும்
புரிவதில்லை.....
காதலர்கள்...
இப்பொழுதும்
ஒரே ஊரில்
வசிக்கிறோம்....
நம் திருமணம்
ஒரே ஊரில்
ஒரே மண்டபத்தில்
ஒரே நாளில்
ஒரு வருடம்
முன்பு உனக்கும்
பிறகு எனக்கும்
நடந்தது....
நீயும்
நானும்
மகிழ்ச்சியாக
இருப்பதாக
ஊர் மக்கள்
சொல்லுகிறார்கள்.....
நம்
துயரங்களை மட்டுமே
அறிந்திருந்த ஊருக்கு
நம் மகிழ்ச்சியை
தெரிவித்தது சரியா
தவறா என்பது
ஒவ்வொரு முறையும்
புரிவதில்லை.....