கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
Monday, May 4, 2015
சக்தீஸ்வரி...
சுழலும்
காற்றாடியாய்
விரையும் நேரம்...
ஒளிரும்
விளக்கில்
பரவும் வாழ்க்கை...
இரவுகளில்
களிப்புறும்
காளைகளின் இன்பம்...
இறந்த உடல்களின்
கால்களில் அழகாய்
நிரம்பிக் கிடக்கும்
பூக்களாய்
கடந்துவந்த
ஆசைகள்....
ஸ்பூர்த்தி
நேற்றைய
மழைப் பொழுதில்
மெதுவாய் எட்டிப் பார்த்த
நினைவுகளின்
வாசம்...
காத்திருக்கும்
பொழுதுகளில்
புதுப்பித்த
கனவுகள்...
மழைநீர்க்
குடுவையில்
முகத்தையொட்டி
இமைகளை சிமிட்டியுணரும்
குழந்தைமை....
நினைவுகளில்
கிடந்துணரும்
தனிமையின்
பெருவலி...
ஸ்மிர்தி
ஏதேனும் சிலநேரத்து
சிந்தனைகளில்
உணரக்கூடும்...
அழிந்தொழியும்
இலட்சியங்களும்
நேசத்திரள்வுகளும்
என்றாவது
உறங்கும் தருணங்களில்
சொப்பனங்களில்
உரையாடும்...
இரவுகளில்
தூரமாய் மறையும்
இசையொலியை
ஒத்த குரல்களின்
கவிதையாய்
சலனமற்ற வாழ்க்கை...
Sunday, May 3, 2015
நேசிகா
நினைவுகளின்
குளுமையில்
இளைப்பாறும்
நட்பு...
மஞ்சள் சிவப்பு
பூக்களின் நிறங்களில்
ஒட்டியிருக்கும்
காதல்...
நதிக்கரை
மூங்கில் பாலங்கள்
இணைத்திருக்கும்
உறவு...
நதியோடும்
தூரம்வரை
உடன்வரும் ஆகாய
பிம்பம்....
காற்று
கலைத்து
மறைந்து விடும்
மேகம்....
வெறுமையை
நிரப்பிக் கொல்லும்
நேசப் பிணைப்பு...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)
மதுவந்தி
மனிதர்களற்ற இடம்தேடி அமர்வதே இயல்பாகிவிடுகிறது முதலில் ... எல்லா பேருந்து பயணங்களின் தொடக்கத்திலும். --------------------------------------...
நேற்றிரவு
நேற்று இரவு உனது மங்கலான நினைவு என் இதயத்தை நிரப்பியது! வனாந்தரத்தில் வசந்தத்தின் அமைதியான வருகையைப் போல, பாலைவன தென்றலின் மென்மையான காலடிய...
ஈவ்லின்
புத்தகக் கடைகளிலெல்லாம் உனக்குப் பிடித்த புத்தகங்களையே புதிது புதிதாக என்னிடம் தருகிறார்கள்.... பரிசளிக்க முடியதென்றாலும் பத்திரமாய...