கண்ட நாள் முதல்
இங்கிருந்தது நெருக்கமின்றி
அந்நியமாக...
என்னுடையதுமல்ல...
தொலைபேசி
அழைப்புகளற்ற
நாளொன்றில்
தற்செயலாய்
பேசத்தொடங்கியது...
இரண்டு மூன்று
நாட்களாக
காணவில்லை...
தேடிய இடங்களிலெல்லாம்
தென்படவுமில்லை...
எங்கு சென்றிருக்கும்...
அறைக்கு வந்துசெல்லும்
அனைவரிடமும்
விசாரித்தாயிற்று...
பார்வை நகரும்
இடங்களிலெல்லாம்
தேடத்தொடங்குகிறது
அனிச்சையாய்...மனது...
சிறிதுகாலத்திற்கு
முன்புவரை உறக்கமற்ற
நள்ளிரவுகளில்
எதையாவது பேசிக்கொண்டு
விழித்திருக்கும்...என்னோடு...
மனிதர்களைப்
போன்றதல்ல புத்தகங்கள்
தொலைத்துவிடுவதற்கும்...
மறந்துவிடுவதற்கும்...
மிக மிக உண்மை!! அருமை!
ReplyDeleteநாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளரட்டும் தங்கள் கவிதைகள்!!
-Princess