உன் நிழல்
விழும் குளங்களில்
கல்லெறிவதில்லை நான்
எப்பொழுதும்..
-----------------------------------
என் தாலாட்டுகளில்
கண் அயர்ந்தவளே
இப்பொழுதெல்லாம்
உறக்கத்துக்கு
என்ன செய்கிறாய்... நானில்லாமல்..
--------------------------------
பிரபஞ்சவெளிகளில்
தேடியலைந்து
தீராத ஆவேசத்தோடு
காற்றில் மோதி மோதி
தற்கொலை செய்துகொண்டது
உன்னை பிரிந்த உயிரொன்று..
--------------------------------
பண்படுத்தாத
நிலமொன்றில் எப்பொழுது
விளைந்திருக்கும்
செய்துவிடத் தவிக்கும்
கொலையொன்று..
கற்பழிப்பொன்று...
வங்கி கொள்ளையொன்று...
வார்த்தைப் பிரயோகம் வியக்க வைக்கிறது நண்பரே!
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்
GK,
ReplyDeleteFirst n third--- super... நல்ல கற்பனை!!
Last one- என் அறிவுக்கு எட்ட வில்லை!!
Publish a book!! expecting it soon!!
குறு கவிதைகளுக்கு எப்போதும் ஒரு
ReplyDeleteஇனிமை உண்டு. உங்கள் வரிகளில் அது
மிகவும் இனிக்கிறது. அருமை நிறைய
எழுதுங்கள். (வேலையை முடித்துவிட்டு :) )
- வெங்கடேஷ்