Monday, January 27, 2020

வசந்தகால வருகையின்பொழுது

உன் இதழ்களின்

ஸ்பரிசங்களுக்காக
இறந்துபோன கனவுகள்
இளமைக்கால நினைவுகள்
தொலைந்த ஞாபகங்களில்
மீண்டும் துளிர்க்கிறது
ஒருவசந்தகால வருகையில்…!


உன் நினைவுகளின்

வாசனையை
நிரப்பிக்கொண்ட,
உன் காதலரின்
குருதியை விரவிக்கொண்ட,
ரோஜா மலரெல்லாம்
திறந்துகொண்டது…!


மங்கையின் தழுவலில் மயங்கும் மதி,

மனதில் நினைவுறும் வலிகள்,
தோழமையின் துன்பங்கள் வருத்தங்கள்,
அனைத்தும் திரும்பிவிட்டன மீண்டும்
நம் துயரங்கள்…!


மீண்டும் 

புதிதாய் பிறக்கிறது,
அனைத்து கேள்விகளும் பதில்களும்
மறுபடியும்
ஒரு வசந்தகால வருகையின்பொழுது...!
*******************************************************

உருது     : ஃபயஸ் அஹமது ஃபயஸ்
ஆங்கிலம் : ஷெய்ன் சுகா

No comments:

Post a Comment