கிராமத்துக்குச் செல்லும் நாட்கள்
தவிர்த்து வேறு பொழுதுகளில்
ஆற்றில் குளிப்பதில்லை...
கரைகளில் அவிழ்த்து வைக்கும்
துணிகளோடு இறங்கிவிடும்
குழந்தை பிராயத்து நினைவுகள்...
மெதுவாய் கால் நனைத்து,
ஆழம் பார்த்து, கால் பதித்து,
தலை மூழ்கும் பொழுதுகளில்
கேட்கிறது எங்கோ
இறந்து போனவனின்
அச்சுறுத்தும் இறுதி மூச்சு...