விளக்குகள் ஒளிரும்
மின் இரவுகளில்
துணைவனோடு நடந்து
செல்லும் பெண்கள்...
அன்பை தின்று
செறித்த காதல்
கொன்று குவித்த
மனிதக் கழிவுகள்...
காரணங்களை அசலாக்கி
சண்டையிட்டு பிரிந்தவளின்
அடைபடாத கடனாக
இறந்தவனின் வாழ்க்கை...
கதறி அழுதவளின்
குரலில் இறந்தவனின்
வலி உணர்த்தும் காதல்...
நம்பிக்கைகளை
வளர்த்திடாமல் நாகரீகம்
காத்திட்ட குற்றவாளியாய்
சுமக்கத் தொடங்கிய
இறப்பின் அர்த்தம்...
ஜனனம் சேர்த்திட்ட
உறவுகளனைத்தும் தொடர்ந்திடாத
மரணம்...
பிரிவதைப் போன்று
எளிதல்ல...முற்றிலுமாய்
இழந்துவிடுவது....
பிரிவதைப் போன்று
ReplyDeleteஎளிதல்ல...முற்றிலுமாய்
இழந்துவிடுவது....
- Super Sir
-- SHA