இரவுகளைத் திடுக்கிட்டு
விழிக்கச் செய்யும்
அமானுஷ்ய கனவுகள்...
தனிமையில் ஒளிரும்
விளக்குகள்
துயரங்களில் உழலும்...
தெருக்களில்
அலைந்து திரியும்
மனிதர்கள் ஊளையிடும்
நடுநிசியில்
உறங்கச் செல்லும்
பூக்கள்...
இரவுகளை தாலாட்டி
உறங்கவைத்த
உருவங்களை காணவில்லை
விழித்த பிறகும்....
No comments:
Post a Comment