Sunday, January 5, 2020

ரக்க்ஷிதா

அந்த
உரையாடல்
இறுதியில்
ஒரு
யுத்தமாக
மாறியது!
தீராத
ஆவேசத்துடன்
வார்த்தைகளை
நாணிலேற்றி
அம்புகளை
செலுத்தியபடி
அவன்!
வழிந்தோடும்
கண்ணீரை
கேடயமாக
கொண்டு
அவள்!
இருவருக்கும்
வெற்றி
தோல்வியின்றி
நின்றுபோனது
அந்த
யுத்தம்!
குழந்தைகள்
தூதர்களாக
வழிநடத்தும்
சமாதான உடன்படிக்கை
எந்த யுத்தத்தையும்
முடிவுறச் செய்துவிடுகிறது!

No comments:

Post a Comment