நினைவு
தினமொன்றில்
நிழலாடியது
ஒரு
நிழற்படம்!
செய்திப்
புத்தகமொன்றின்
முகப்பு
அட்டையென
ஞாபகம்
இருக்கிறது!
உணர்வுகளை
கடத்துவதால்
சில
நிழற்படங்கள்
உயர்திணை!
மணல்தரையில்
மண்டியிட்டு
தலையை ஒருபுறமாக
சாய்த்து
இரண்டு கைகளையும்
விரித்து
உணர்வுகள்
மேலோங்கி
அழுது புலம்பும்
பெண்ணொருத்தி!
ஆழிப்பேரலை
அள்ளிச்சென்று
திருப்பியனுப்பிய
உப்புநீரில்
ஊதிப்பெருத்து
உணர்வின்றி
கிடக்கிறது
ஒரு கை!
ஆழிப்பேரலையில்
இறந்தவரின்
கையறுநிலை பெண்
தாயாகவோ
மகளாகவோ
தாரமாகவோ
சகோதரியாகவோ
தோழியாகவோ
இருக்கலாம்!
அழுது புலம்பியவள்
ஆடைநிறமும்
இறந்து கிடந்தவர்
கையின் நிறமும்
ஒன்றாகவே இருந்தது!
இறந்துகிடந்தவர் கைக்கும்
மண்டியிட்டு அழுத பெண்ணுக்கும்
இடையேயான தூரம்
காலம் நிரப்பும்
துயரம்!
தினமொன்றில்
நிழலாடியது
ஒரு
நிழற்படம்!
செய்திப்
புத்தகமொன்றின்
முகப்பு
அட்டையென
ஞாபகம்
இருக்கிறது!
உணர்வுகளை
கடத்துவதால்
சில
நிழற்படங்கள்
உயர்திணை!
மணல்தரையில்
மண்டியிட்டு
தலையை ஒருபுறமாக
சாய்த்து
இரண்டு கைகளையும்
விரித்து
உணர்வுகள்
மேலோங்கி
அழுது புலம்பும்
பெண்ணொருத்தி!
ஆழிப்பேரலை
அள்ளிச்சென்று
திருப்பியனுப்பிய
உப்புநீரில்
ஊதிப்பெருத்து
உணர்வின்றி
கிடக்கிறது
ஒரு கை!
ஆழிப்பேரலையில்
இறந்தவரின்
கையறுநிலை பெண்
தாயாகவோ
மகளாகவோ
தாரமாகவோ
சகோதரியாகவோ
தோழியாகவோ
இருக்கலாம்!
அழுது புலம்பியவள்
ஆடைநிறமும்
இறந்து கிடந்தவர்
கையின் நிறமும்
ஒன்றாகவே இருந்தது!
இறந்துகிடந்தவர் கைக்கும்
மண்டியிட்டு அழுத பெண்ணுக்கும்
இடையேயான தூரம்
காலம் நிரப்பும்
துயரம்!
No comments:
Post a Comment