Sunday, January 5, 2020

மயூரி

வெண்ணிற ஒளி
கசியும் அடர்வனம்!
பச்சை இலைகளின்
உடலெங்கும்
படர்ந்திருக்கிறது
மஞ்சள்நிற மயக்கம்!
வளைந்து நிற்கும்
மரங்களின் ஊடே
ஒளிந்திருக்கிறது
அதிசயங்கள்!
நீண்ட சாய்வு
மரப்பலகையில்
யாருமின்றி காத்திருக்கிறது
வெற்றிடம்!
இறுதியில்
ஒளி
ஒன்றே
உவகை செய்யும்
அனைவருக்கும்!

No comments:

Post a Comment