வானவில் தனது
அத்தனை வண்ணங்களையும்
வழங்கியதிந்த பிறப்பு
எனக்கு!
அவளது
அன்னையின்
கண்ணீரெனும் பெயரில்
எனது உடலில்
ஒடுகிறது குருதி…
எனவே
தனித்திருக்கும்
குளங்களையும்
அழுது புலம்பும்
மரங்களையுமே
தெரிவுசெய்கிறேன்
நான்!
வண்ணச் சாயல்களின் மகிமையில்
பெருமைமிகு மயில்களோடு
பசுமை நிரம்பி
வழியும் பூங்காக்களில்
நீங்கள் வாழவேண்டும்!
ஒவ்வொரு இறகுகளும்
கண்ணாடி போன்ற மென்மையான
புல்வெளியில்
அதன் அடையாளங்களை
தெரிவிக்க வேண்டும்;
பெருமைமிக்க மீன்கொத்திகளின்
முன்பாக மரக்கிளைகளில்
உங்கள் இறக்கைகளை
தட்டுங்கள்!
அப்படியல்ல, அன்பான பறவை,
நீ வீணாய் இல்லை;
நீயல்ல பெருமை, லட்சிய மனது;
எல்லா மனிதர்களிடமும் தூரமாக,
நானும் அமைதியை விரும்புகிறேன்,
அது பசுமையானது;
ஒரு தனிமையான குளம், மற்றும்
சாய்ந்து நிற்க ஒரு மரம்!.
-W.H.டேவிஸ்
(Kingfisher – W.H.Davis)
அத்தனை வண்ணங்களையும்
வழங்கியதிந்த பிறப்பு
எனக்கு!
அவளது
அன்னையின்
கண்ணீரெனும் பெயரில்
எனது உடலில்
ஒடுகிறது குருதி…
எனவே
தனித்திருக்கும்
குளங்களையும்
அழுது புலம்பும்
மரங்களையுமே
தெரிவுசெய்கிறேன்
நான்!
வண்ணச் சாயல்களின் மகிமையில்
பெருமைமிகு மயில்களோடு
பசுமை நிரம்பி
வழியும் பூங்காக்களில்
நீங்கள் வாழவேண்டும்!
ஒவ்வொரு இறகுகளும்
கண்ணாடி போன்ற மென்மையான
புல்வெளியில்
அதன் அடையாளங்களை
தெரிவிக்க வேண்டும்;
பெருமைமிக்க மீன்கொத்திகளின்
முன்பாக மரக்கிளைகளில்
உங்கள் இறக்கைகளை
தட்டுங்கள்!
அப்படியல்ல, அன்பான பறவை,
நீ வீணாய் இல்லை;
நீயல்ல பெருமை, லட்சிய மனது;
எல்லா மனிதர்களிடமும் தூரமாக,
நானும் அமைதியை விரும்புகிறேன்,
அது பசுமையானது;
ஒரு தனிமையான குளம், மற்றும்
சாய்ந்து நிற்க ஒரு மரம்!.
-W.H.டேவிஸ்
(Kingfisher – W.H.Davis)
No comments:
Post a Comment