நினைவிலிருந்து
மறையத் தவிக்கிறது
அந்த செய்தி…
பட்டியல் சமூக
17 பேர் படுகொலை …
மேட்டுக்குடி மனிதன்
தீட்டுச்சுவரிடிந்து
தோற்றுப்போனது
அந்த வாழ்க்கை…
உறங்கிய விழிகள்
நான்கு-மீண்டும்
உயர்கனவினில்
விழித்திருக்கும்…
சேரிக்குடி பிறந்தவர்கள்
சிகரம் தொடுவதெல்லாம்
சுலபமா…என்ன?
உயிர்ஆவி பலகுடித்தாலும்
அடங்காத பாசிசம்…
காவிநிறம்
கொண்டலையும்
பொய்க் கருத்தியல்
பேய்களெல்லாம்
பிறர் சாவிலும்
சமரசம் செய்யும்
சலனமின்றி…
ஆணவம்
தான் சுமந்து
அவனியில் அலையுமந்த
சாதி அரக்கர்கள் நலம்
பேணியே
அமைந்திடுமெந்த அரசும்…
மீறி
நாம் கற்பிப்போம்
மனிதமென்று…
சேரிகள்தோறுமெங்கும்
நாம் சிகரங்களாய்
ஒன்றிணைவோம்…!
மறையத் தவிக்கிறது
அந்த செய்தி…
பட்டியல் சமூக
17 பேர் படுகொலை …
மேட்டுக்குடி மனிதன்
தீட்டுச்சுவரிடிந்து
தோற்றுப்போனது
அந்த வாழ்க்கை…
உறங்கிய விழிகள்
நான்கு-மீண்டும்
உயர்கனவினில்
விழித்திருக்கும்…
சேரிக்குடி பிறந்தவர்கள்
சிகரம் தொடுவதெல்லாம்
சுலபமா…என்ன?
உயிர்ஆவி பலகுடித்தாலும்
அடங்காத பாசிசம்…
காவிநிறம்
கொண்டலையும்
பொய்க் கருத்தியல்
பேய்களெல்லாம்
பிறர் சாவிலும்
சமரசம் செய்யும்
சலனமின்றி…
ஆணவம்
தான் சுமந்து
அவனியில் அலையுமந்த
சாதி அரக்கர்கள் நலம்
பேணியே
அமைந்திடுமெந்த அரசும்…
மீறி
நாம் கற்பிப்போம்
மனிதமென்று…
சேரிகள்தோறுமெங்கும்
நாம் சிகரங்களாய்
ஒன்றிணைவோம்…!
No comments:
Post a Comment