கருப்பு வெள்ளையென
கலந்திருக்கிறது மேகக் கூட்டங்கள்
மழையென பொழிவதற்கு...
மெல்லியக் கீற்றென
ஊடுருவுகிறது சூரியஒளி
எல்லா இடங்களிலும்...
கலங்கரை விளக்கமொன்றின்
உச்சியில் சுழன்று
கொண்டிருக்கிறது காற்றாடி...
நீத்தார் கடன் செய்ய
வந்த ஒருவன் நண்டுகளை
துரத்துகிறான் கவலைகளின்றி...
கடல்மணலை கிளப்பிவிட்டு
செல்கிறது குதிரையொன்று
முதியவரை சுமந்தபடி...
கரைக்கும் கடலுக்குமாக
நீண்டிருக்கிறது ஒற்றை
சிமெண்ட் பாலம்...
மணல் வெளிகளில்
கொத்துகிறது கடல் பறவை
எதையோ தூரமாய்...
கரையோரம்
ஒளிந்திருக்கிறது ஆணும்
பெண்ணுமாய் கால்தடங்கள்...
கரையொதுங்கிய
சடலத்தை நுகர்ந்துவிட்டு
நகர்கிறது காற்று...
வேடிக்கையில்
நிற்கிறது கீறி - பாம்பு சண்டை
பார்க்கும் கூட்டமொன்று...
பலத்த ஓசையோடு
தொடங்குகிறது மழை...
தெறித்துச் சிதறுகிறது கூட்டம்...
இறந்தவனைச்சுற்றி
சுற்றி வருகிறது
தெருநாயொன்று...ஊளையிட்டபடி...
எழுத்துக்கள் அருமை!
ReplyDeleteஇங்கே அனைத்து படைப்புகளுமே....
மாற்றுக் கருத்து இல்லை!
பொதுவாய் ஓர் கேள்வி...
வார்த்தைகளில் கொப்பளிக்கும் சமூகப் பார்வை
இயலாமையின் வெளிப்பாடு மட்டுமா???
கரை புரண்டோடும் சொற்கள்
களம் காணாத போர் வீரனின் குமுறல்களா!!
மாற்றம் காண வழி ஏதும் வகுக்காதா!!!
களம் இறங்காதா!!
-Princess