செம்மண் சாலைகளின்
இருபுறமும்
பச்சை பசேலென
உயர்ந்திருக்கிறது அடர்த்தியாக
மரங்கள்...
நீண்டு வளையும்
சாலையின் இடது ஓரச்
சரிவுகளில் பரந்திருக்கிறது
புல்வெளி...
உடையவனை தொலைத்துவிட்ட
நிழற்படக் கருவியொன்று
ஊடுருவிச் செல்கிறது
மரங்களின் இடையே...
காற்றின் விசையில்
மஞ்சள் பூக்களை உதிர்க்கிறது
ஒற்றை மரமொன்று...
உதிர்ந்த மலர்களை
தாங்கி நிற்கிறது கான்கிரீட்
அமர்வு பலகை...
விருட்டென்று பறக்கிறது
பறவைகள் மேற்கு நோக்கி...
அணில் கடித்த
பாதியாக கிடக்கிறது
ஆப்பிள் பழமொன்று...
எல்லைகளாக நிற்கிறது
மரச் சட்டங்களில்
வேலிகள்...
இறுகத் தழுவியபடி
ஆணும் பெண்ணும்
நின்றநிலையில்...
அச்சத்தில் வெளிறியிருக்கிறது
பெண்ணின் முகம் ...
மழைத்துளிகள் விழுந்துருகும்
பனிக்கட்டியென
ஆண்மையில் உருகிநிற்கும்
பெண்மை...
//அச்சத்தில் வெளிறியிருக்கிறது
ReplyDeleteபெண்ணின் முகம் ...
மழைத்துளிகள் விழுந்துருகும்
பனிக்கட்டியென
ஆண்மையில் உருகிநிற்கும்
பெண்மை...//
ஒவ்வொரு கவிதையிலும் மெருகேறுகிறது உங்கள் கவிதை நடை. வேறென்ன சொல்ல நண்பரே? அசத்துகிறீர்!
-ப்ரியமுடன்
சேரல்