குளக்கரையோரம்
குதித்துச் செல்வது நீ
அதிர்வது நீரும்
சில நேரங்களில் நானும்...
----------------------------------
மீசையும் ஆசையும்
வளர்ந்துவிட்ட
பிறிதொரு நாளில்
தாயின்மடி உறங்கி
தாலாட்டு கேட்கும்
சுகம் இழந்து
அனாதையானேன்
பொருள் தேட...
---------------------------------
என்னைச்
செதுக்கியதும்
அதிகம் பிடித்துப்போனது
உனக்கு பிடிக்காத
என்னை....
"அதிர்வது நீரும்
ReplyDeleteசில நேரங்களில் நானும்..."
நன்று, நினைத்து நினைத்து சிரித்தேன்
- வெங்கடேஷ்