குளத்தில் வீசிய
நினைவுகளின்
அதிர்வுகள் வளையங்களாய்
நகர்கிறது...
துள்ளி குதிக்கும்
பால்ய காலத்து
நினைவுகள்
படித்துறை மீன்களை
ஒத்திருக்கிறது...
கரையில் அலையும்
நண்டுக்கு வழிகாட்ட
யாருமில்லை...
எருமை மாடு குளிப்பாட்டி
கால் கழுவி குளித்து
புறப்படும் பொழுதுகளில்
குளத்தில் இருக்கிறது
பாம்பு பற்றிய அச்சம்...
//குளத்தில் இருக்கிறது
ReplyDeleteபாம்பு பற்றிய அச்சம்... //
மிகச் சிரி. அனைத்துமே ரசிக்கக்கூடிய வரிகள்.
நண்பரே.. குழந்தைக்கு பேரு வைக்க பேர் தேடி அலைவோருக்கு உங்கள் முகவரியைத் தந்திடலாம் போல :-)
nalla irukku Sir
ReplyDelete-Prem