இன்று
துக்கம் மற்றும் வலிகளெனும்
இழையில்
உன்
நினைவுகளில்
பறித்த
மலர்களை
கட்டினேன்….
நாம்
ஒன்றாகயிருந்த
கணங்களில்
மலர்ந்த பூக்களை
கைவிடப்பட்ட
அன்பின்
பாலைவனத்தில்
பறித்தேன்…..
பிறகொருநாள்
உன்
நினைவுகளின்
நாட்களுக்காக
உன்
வீட்டு வாயிலில்
சமர்ப்பித்தேன்…
ஆசையெனும்
குவளையின்
அருகருகே
அமைந்தன
பிரிவின் சாம்பலும்
நம்
காதலின் மலர்களும்…!
#######################################
உருது : ஃபயஸ் அஹமது ஃபயஸ்
ஆங்கிலம் : ஷெய்ன் சுகா
No comments:
Post a Comment