இருள் படர்ந்த
காட்டு வெளியின்
ஒற்றைப் பாதையில்
பயணிக்கிறது...
சுற்றிலும் காட்டு
மிருகங்களின்
குரல்...
மரங்களின் ஊடே
வீசும் காற்றின்
சப்தத்தையும் தாண்டி
எந்தக் கவலையும்
இல்லாமலே நடக்கிறது
நிசப்தமாக
தன் இலக்கு நோக்கி...
நடந்துவந்த
பாதைகளில்
பாவங்களின்
சுவடுகள்
இரத்தத் துளிகளாய்..
திரும்பிபாரமலே
திக்கு நோக்கி
நீள்கிறது - ஒளியைத் தேடி...
இதோ இன்னும்
சில அடி தொலைவில் என் இலக்கு
மெல்லிய வெளிச்சமாய்...
எப்பொழுதும் போல கவிதை மெத்த சிறப்பு!!
ReplyDeleteதலைப்புகள் எல்லாம் பெயர்களாகிப் போவதன் காரணம் என்ன?
-Princess