Friday, September 29, 2017

பிரணீதா

மீளமுடியா
துயரங்களும்
இருக்கவே
செய்கிறது….
மீள்வதா
முடிவதா என
தயங்கியே
கழிகிறது
காலம்….
கடந்துவந்த
பாதைகளில்
புதிதாய் முளைத்த
பெருஞ்செடியின்
துர்க்குண நிழல்
விரிந்துகிடக்கிறது…
மிதித்து
கடந்துவிடலாமெனில்
வலிக்குமென்றே
தாவிக்குதித்து
நிற்கும் சுயம்….சற்றே தள்ளி….
தொடர்ந்தே வருகிறது
துயரம்…..

No comments:

Post a Comment