Friday, September 29, 2017

முத்ரா

உன்னோடு
பேசிக்கொண்டிருக்கும்
இன்பத்தை
நீயேதான்
உணரவைத்தாய்…
நீயில்லாத
நாளொன்றில்…..
கடந்துவந்த
தூரங்களில்
வியர்த்துதிர்ந்த
உன் நினைவுகள்
நடக்கின்ற
ஒவ்வொருமுறையும்
துளிர்த்துவிடுகின்றது….
இரவுகளில்
ஒலிக்கிறது
இசைப்பாடலின்
கடைசிவரியாய்
எப்பொழுதும்
உன் நினைவு
எனை என்ன செய்தாயென்று….
நீயில்லாமல்
உன்னோடு
உரையாடுவதை
பிறிதொருவர்
போதித்த
நாளொன்றில்
புதிதாகத்தான்
இருந்தது
நீயும்
உன் நினைவும்….எனக்கு மட்டும்….

No comments:

Post a Comment