Friday, September 29, 2017

சயந்தரா

தூண்டில்
இரையென
உன்னிடம்
அகப்பட்டிருக்கிறது
என் நினைவுகளெல்லாம்….
சூழ்ச்சி இரைகளில்
முழுவதும்
சிக்கிவிடாமல்
மிகவும்
நுணுக்கமாக
பிரித்தெடுக்கிறேன்
சில மீன்களின்
இலாவகத்துடன்
என் நினைவுகளை….
பெருநதியின்
துணை ஆறாக
கிளைத்தோடுகிறது
எப்பொழுதும்
என்
நினைவுகளில்
உன்
உபநினைவும்
சேர்ந்தே….

No comments:

Post a Comment