Thursday, December 19, 2019

போகன்வில்லா

எந்தப்
பட்டறையிலும்
ஆயுதங்கள்
உருவாக்கப்படுவதில்லை
போலியாக கூட…!
எந்த
வகுப்பிலும்
எதிராக
பயிற்றுவிப்பதில்லை
போலியாக கூட…!
எந்த
நிலையிலும்
அவமரியாதை
செய்வதில்லை
போலியாக கூட…!
நம்பிக்கைகளையெல்லாம்
அவநம்பிக்கைகளால்
தகர்த்துக்கொண்டீர்…!
இடத்துக்குஇடம்
மாறிக்கொள்ளும் நிறங்களில்
ஒளிந்திருக்கும் அச்சங்கள்
பரிசளிக்கும் காலத்தை
தின்று செரிக்கும்
பெரும் புதையலொன்றை…!
எளிதில்
உருவாக்கிவிடலாம் ஒன்றை…
ஒன்றைப்போலவே
பிறிதொன்றை..
இன்னும் பலவற்றை…!
ஒவ்வொருமுறையும்
விழுந்தெழுகின்ற குழந்தையின்
உணர்வுகளை பிரதியெடுக்க
போலி மனிதர்களால்
என்ன செய்யமுடியும்…!

No comments:

Post a Comment