Saturday, December 14, 2019

நீலவேணி

கடினமாகவே
இருக்கிறது
உலகியல் அறிவை
இயல்பாக
சுமப்பது…

அதீத குரூரங்களை
உணர்வுகள்
ஏதுமின்றி
செய்துமுடிக்கும்
மனித மிருகங்களை
தெரிந்துகொள்வது…

கடுமையான
வலிகளை
சில காரண
காரியங்களுக்காகவே
தந்துவிடும்
மனித மிருகங்களை
அறிந்துகொள்வது…

தீராத துன்பங்களை
தயவு தாட்சண்யமின்றி
ஏராளம் தந்தருளும்
தாராள மனம்படைத்த
மனித மிருகங்களை
புரிந்து கொள்வது…

வேசிகளின் பாசமும்
தாசிகளின் அக்கறையும் காட்டும்
சில மிருகங்கள்
நாட்டு விலங்குகளாக
இன்னும் உலவி
வருகிறது
தரணியில்
மனிதர்களாக….

கடினமாகவே
இருக்கிறது
உலகியல் அறிவை
இயல்பாக
சுமப்பது…

No comments:

Post a Comment