Monday, January 27, 2020

பிரியமானவனும் அவன் பிரியமும்

நீண்டகாலமாக
நடந்துவந்த நினைவுகளின்
பாதை முடிந்துவிடும் அசட்டையான
தனிமைக்குள் திரும்பும்
உன் காலடிகளோடு...
அந்த பொழுதிலிருந்து
நீயும் நானும் இல்லாதிருப்போம்
அந்த கணத்தில் உன்மீது
நிலைத்திருக்கும் என் கண்கள்
எதிரில் வா
கடந்து போ
அல்லது
திரும்பி பார்...

அது வெறும் மாயையென
அறிந்திருக்கிறேன்
நம்பிக்கைகளின்
உறுதியில்
ஒருவேளை எங்கேனும்
எப்பொழுதேனும்
என் கண்கள்
உன்னைத் தழுவினால்
உருவாகக்கூடும்
புதிதாய் ஒர் பாதை
அதேபோன்று
எதிர்படுதல்
மீண்டும் நிகழலாம்
உன் விலங்குகள்
விழும் தருணங்களில்
என் கரங்களின் பயணம்...
இதயமறிந்திருக்கும்
பிறிதொரு சூழலின் பொய்மை
அன்பிற்குரியதை
பிறிக்கக்கூடிய
திசைமாற்றலோ, தனிமையோ,மறைத்தலோ
ஏதுமில்லை.
உன் பாதங்களில்
உருவாகுமிந்தப் பாதை
அப்படியே இருக்கட்டும்... நீ ஒருபொழுதும்
திரும்பவில்லையென்றாலும்
எனக்கொரு பொருட்டல்ல...
#######################################
உருது : ஃபயஸ் அஹமது ஃபயஸ்
ஆங்கிலம் : ஷெய்ன் சுகா

No comments:

Post a Comment