Monday, January 27, 2020

தொடக்கம்

வார்த்தைகள் மௌனித்த
கணங்களில் நிறையாத
வெற்றுப்பக்கங்களின் அர்த்தங்களை
ஒரு நாள் கூடுமாயின்
உன் கண்கள் கண்டடையலாம்...
உயர்ந்தெழும்
காற்றின் வீச்சுக்கு ஏங்கி தவித்து
தாழ்ந்து வீசும்
ஏகாந்த இசைப் பாடல்கள்
ஒரு நாள் கூடுமாயின்
 உயர்ந்து பறக்கலாம்...
நடைபாதை
வழியோரமாய்நிந்தையுற்று கிடக்கும்
கற்களைப்போன்ற
அந்த இதயத்தின் துடிப்பு
ஒரு நாள் கூடுமாயின்
உன்னைச் சேரலாம்...
*******************************************************
உருது     : ஃபயஸ் அஹமது ஃபயஸ்
ஆங்கிலம் : ஷெய்ன் சுகா


No comments:

Post a Comment