பிரிவின் துயர்மிகுந்த
அந்த இரவு
எவ்வளவு நீளமானது!
அந்த இரவின்
துவர்ப்பினை - உன்
வார்த்தைகள் வழங்கிய
நம்பிக்கையில்
விழுங்கினேன்..என் அன்பே...
உன் வாக்குறுதியில்
தண்டைகளென முழுமையாய்
விலங்கிடப்பட்ட
என் நம்பிக்கைகள்
அசைந்து ஒலியெழும்பும்..
உன்மீதான அன்பில்
என் சரீர மாமிசத்தை வழங்கி
காக்கைகளை தூதராக அனுப்பினேன்
விரைவில் முடியுமிந்த இரவில்
என் காதல் வரும்...
மீண்டும் அந்த
பாதையில் மணித்துளிகளை
பார்த்துக்கொண்டிருந்தேன் நான்...
ஒருவரும் வரவில்லை
எக்காளமிட்டவர்களைத் தவிர...
எதுவும் வரவில்லை
இகழ்ச்சியின் பெரும்புயல் தவிர...
இன்று...
அந்த இகழ்ச்சியை
கண்டித்துவிடு...
நீண்ட பிரியமான அன்பே...
அதிகாலையில் நான்
வியப்படைகிறேன்...
நன்றி கடவுளே, மகிழ்ச்சி மீண்டும் வந்துவிட்டது!
#######################################
உருது : ஃபயஸ் அஹமது ஃபயஸ்
ஆங்கிலம் : ஷெய்ன் சுகா
அந்த இரவு
எவ்வளவு நீளமானது!
அந்த இரவின்
துவர்ப்பினை - உன்
வார்த்தைகள் வழங்கிய
நம்பிக்கையில்
விழுங்கினேன்..என் அன்பே...
உன் வாக்குறுதியில்
தண்டைகளென முழுமையாய்
விலங்கிடப்பட்ட
என் நம்பிக்கைகள்
அசைந்து ஒலியெழும்பும்..
உன்மீதான அன்பில்
என் சரீர மாமிசத்தை வழங்கி
காக்கைகளை தூதராக அனுப்பினேன்
விரைவில் முடியுமிந்த இரவில்
என் காதல் வரும்...
மீண்டும் அந்த
பாதையில் மணித்துளிகளை
பார்த்துக்கொண்டிருந்தேன் நான்...
ஒருவரும் வரவில்லை
எக்காளமிட்டவர்களைத் தவிர...
எதுவும் வரவில்லை
இகழ்ச்சியின் பெரும்புயல் தவிர...
இன்று...
அந்த இகழ்ச்சியை
கண்டித்துவிடு...
நீண்ட பிரியமான அன்பே...
அதிகாலையில் நான்
வியப்படைகிறேன்...
நன்றி கடவுளே, மகிழ்ச்சி மீண்டும் வந்துவிட்டது!
#######################################
உருது : ஃபயஸ் அஹமது ஃபயஸ்
ஆங்கிலம் : ஷெய்ன் சுகா
No comments:
Post a Comment