Monday, January 6, 2020

அன்பின் ரசவாதம் (ரூமியின் பாடல்)

நீ
பிறிதொரு உலகத்திலிருந்து
எங்களிடம் வருகிறாய்.

நட்சத்திரங்களுக்கு அப்பாலுள்ள
வெற்றிட விண்வெளியிலிருந்து.
ஆழ்ந்த, தூய,
கற்பனை அழகு கொஞ்சும்
அன்பின் சாரத்தை
உன்னுடன் கொண்டு வருகிறாய்.

உன் ஸ்பரிசத்தில்
அனைத்தையும் மாற்றிவிடுகிறாய்.
முந்தைய கவலைகளும்
துன்பங்களும் துயரங்களும்
உனது முன்னிலையில் கலைந்துவிடுகிறது
ஆட்சியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும்
அரசனுக்கும்
மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது.

நீ
எம்மை நேசிக்கிறாய்.
உனது கிருபையால்
எல்லா தீமைகளும்
நன்மையாக மாறுகிறது.

நீ இரசவாதிகளின் எஜமான்

நீ
அன்பின் நெருப்பை வெளிப்படுத்துகிறாய்
பூமியிலும் வானத்திலும்
இதயத்திலும் ஆன்மாவிலும்
ஒவ்வொருவருக்கும் .
.
உனது அன்பினால்
இருத்தலும் இல்லாமையும் ஒன்றாகிறது,
எதிர்ப்புகளெல்லாம் சமாதானமடைகின்றது.
தூய்மையற்றவையாவும்
மீண்டும் புனிதமடைகிறது…

-தீபக் சோப்ரா..

No comments:

Post a Comment