ஒவ்வொரு
வீட்டிலும் ஒரு
முற்றமாவது
இருக்கிறது…!
ஒவ்வொரு
வீட்டிலும்
கோலமிடுவதில்லை…!
சில வீடுகளில்
கோடுகளாலும்
புள்ளிகளாலும்
புணையப்படுகிறது
கோலங்கள்…!
சில வீடுகளில்
குறியீடுகளாலும்
பூக்களாலும்
சங்கேத மொழியிலும்
வேறுசில பொருட்களாலும்
கோலமிடுவதுண்டு…!
சில வீடுகளில்
பெண்கள்
மட்டுமின்றி
ஆண்களும்
கோலமிடுதுண்டு…!
வெண்மை நிறத்தில்
மட்டுமின்றி
பல வண்ணங்களில்
கோலமிடுவதுண்டு.
தனித்த கறுப்பு
அல்லது
கறுப்பு வெள்ளை
கோலங்களை
அபூர்வமாக கூட
கண்டதில்லை….!
காவியும்
வெள்ளையும்
கலந்த கோலங்களை
சில தனியிடங்களில்
கண்டதுண்டு…!
வேதங்கள்
உபநிஷங்கள்
இதிகாசங்கள்
புராணங்கள்
கோலமிடவே
சொல்வதாக செய்தி…!
அரிசிமாவு
கோலத்திற்கு
ஆயிரம் புண்ணியமாம்…!
பெண்
ஆணுடன்,
மகள்
தந்தையுடன்,
மனைவி
கணவனுடன்
ஒருவர்
பிறிதொருவருடன்
எந்த மொழியிலும்
உரையாடலாம்…!
உலகோடு உரையாட
ஒருவருக்கும்
மொழி தடையாக இருந்ததில்லை
மனம் தான் தடையாக இருக்கிறது…!
கோலங்களிலும்
யாகங்கள் செய்யும்
கோதையர்கள்
வாழ்க பல்லாண்டு...!
வீட்டிலும் ஒரு
முற்றமாவது
இருக்கிறது…!
ஒவ்வொரு
வீட்டிலும்
கோலமிடுவதில்லை…!
சில வீடுகளில்
கோடுகளாலும்
புள்ளிகளாலும்
புணையப்படுகிறது
கோலங்கள்…!
சில வீடுகளில்
குறியீடுகளாலும்
பூக்களாலும்
சங்கேத மொழியிலும்
வேறுசில பொருட்களாலும்
கோலமிடுவதுண்டு…!
சில வீடுகளில்
பெண்கள்
மட்டுமின்றி
ஆண்களும்
கோலமிடுதுண்டு…!
வெண்மை நிறத்தில்
மட்டுமின்றி
பல வண்ணங்களில்
கோலமிடுவதுண்டு.
தனித்த கறுப்பு
அல்லது
கறுப்பு வெள்ளை
கோலங்களை
அபூர்வமாக கூட
கண்டதில்லை….!
காவியும்
வெள்ளையும்
கலந்த கோலங்களை
சில தனியிடங்களில்
கண்டதுண்டு…!
வேதங்கள்
உபநிஷங்கள்
இதிகாசங்கள்
புராணங்கள்
கோலமிடவே
சொல்வதாக செய்தி…!
அரிசிமாவு
கோலத்திற்கு
ஆயிரம் புண்ணியமாம்…!
பெண்
ஆணுடன்,
மகள்
தந்தையுடன்,
மனைவி
கணவனுடன்
ஒருவர்
பிறிதொருவருடன்
எந்த மொழியிலும்
உரையாடலாம்…!
உலகோடு உரையாட
ஒருவருக்கும்
மொழி தடையாக இருந்ததில்லை
மனம் தான் தடையாக இருக்கிறது…!
கோலங்களிலும்
யாகங்கள் செய்யும்
கோதையர்கள்
வாழ்க பல்லாண்டு...!
No comments:
Post a Comment