என்றோ
நம்மிடம் இருந்த
காதலை
என்னிடம் கேட்காதே அன்பே!
நீ
மட்டுமே
வாழ்க்கையின் அனுபவமென
நம்பியிருந்தேன்.
உன்
நினைவுகள்
பிரபஞ்ச
பெரும்கவலைகளை
மறைத்தன.
உன்
முகமே
வசந்த மண்டலங்களில்
மெய்யென இருந்தன.
வேறென்ன இருக்கிறது…?
இந்த
உலகில் உனது
கண்களைத்தவிர…
நான்
வென்றிருந்தால்,
தோற்றிருக்கும்
உன் விதி…
அப்படித்தான்
நான் விரும்பினேன்
ஆனால் அது
அப்படியில்லை…
காதலைத் தவிர
வாழ்க்கையின்
பேரார்வம்
பல…
மீண்டும்
இணைதலைவிட
வாழ்க்கையின்
நிம்மதி
பல…
எண்ணற்ற காலங்கள்
நீண்டிருந்த
இருண்ட
மயக்கம்.
உயர்ந்த
மெல்லிய நோக்கங்களில்
நெய்யப்பட்ட
மனித சிக்கல்கள்.
தெருக்களிலும்
பின்புற சந்துகளிலும்
காட்சியளிக்கும்
இறந்த உடல்
விற்பனை.
குருதியில்
குளித்த சடலங்கள்
மூடிய புழுதியில்
கைவிடப்படும்…
மனது
நினைத்துக்கொண்டிருக்கிறது
அவர்களை,
நான்
என்ன செய்ய முடியும்?
உன்
அழகும் இன்னும்
கவர்ச்சியளிக்கிறது
ஆயினும்
நான்
என்ன செய்ய முடியும்?
காதலைத் தவிர
வாழ்க்கையின்
பேரார்வம்
பல…
மீண்டும்
இணைதலைவிட
வாழ்க்கையின்
நிம்மதி
பல…
என்றோ
நம்மிடம் இருந்த
காதலை
என்னிடம் கேட்காதே அன்பே!
*******************************************************உருது : ஃபயஸ் அஹமது ஃபயஸ்
ஆங்கிலம் : ஷெய்ன் சுகா
No comments:
Post a Comment