காலத்திற்கும்
முன்பாக வீடுகளை
மாற்றிக்கொண்டார்கள்.
பெருகிய
நோய்க்காரணிகளை
மதங்களின்மீது
இரக்கமின்றி
இறக்கிவைத்தார்கள்.
ஆதரவு ஏதுமின்றி
அனாதைகளாக
அலைந்து கொண்டிருந்தார்கள்.
பேரிடர்காலங்களிலும்
சாதிப்பேய்களுக்கு
உணவிட்டுக் கொண்டிருந்தார்கள்.
மனிதர்கள்
யாருமில்லா இடங்களில்
புறாக்கள்
கூடுகட்டி குஞ்சு
பொறித்திருந்தன.
கண்ணியமற்ற
காலமொன்றில் ஊரடங்கை
தளர்த்தினார்கள்.
இறந்த குழந்தையை
பால் கொடுத்த
மார்போடு
அணைத்து நடக்கிறது
தாயின் ஆற்றாமை!
மனிதர்கள் வீடு
திரும்பிய தருணங்களில்
புறாக்களால்
நிரம்பியிருந்தது
அடுக்ககங்களின்
பால்கனிகள்.
யாருக்கு யார்
புலம் பெயர்ந்தவர்கள்
இப்பொழுது?
பொறித்திருந்தன.
கண்ணியமற்ற
காலமொன்றில் ஊரடங்கை
தளர்த்தினார்கள்.
இறந்த குழந்தையை
பால் கொடுத்த
மார்போடு
அணைத்து நடக்கிறது
தாயின் ஆற்றாமை!
மனிதர்கள் வீடு
திரும்பிய தருணங்களில்
புறாக்களால்
நிரம்பியிருந்தது
அடுக்ககங்களின்
பால்கனிகள்.
யாருக்கு யார்
புலம் பெயர்ந்தவர்கள்
இப்பொழுது?
வணக்கம் தோழர். ஞானசேகர்,.
ReplyDeleteதற்போதுதான் பார்த்தேன். திருத்தம் செய்துவிட்டேன்.
தங்களின் கருத்துக்கள் மூலம் நானும் கவிதையும் செம்மையடைகிறோம்.
அன்பிற்கும் வருகைக்கும் நன்றி தோழர்.