Friday, June 5, 2020

மெக்தலீனா

ஒரு விலங்கை
ஒரு இடத்துடன்
தொடர்புபடுத்துகிறார்கள்.

ஒரு இடத்தை
ஒரு இனத்துடன்
தொடர்புபடுத்துகிறார்கள்.

ஒரு இனத்தை
ஒரு மொழியுடன்
தொடர்புபடுத்துகிறார்கள்.

ஒரு மொழியை
ஒரு மதத்துடன்
தொடர்புபடுத்துகிறார்கள்.

ஒரு மதத்தை
ஒரு நோயுடன்
தொடர்புபடுத்துகிறார்கள்.

ஒரு மதத்தை
ஒரு சம்பவத்துடன்
தொடர்புபடுத்துகிறார்கள்.

ஒன்றை
பிறிதொன்றுடன்
தொடர்புபடுத்துகிறார்கள்.

பொதுமைப்படுத்துவதற்காகவே
தொடர்புபடுத்துகிறார்கள்.

இழிவுபடுத்துவதற்காகவே
பொதுமைப்படுத்துகிறார்கள்.

எளியவர்களை,
ஒடுக்கப்பட்டவர்களை,
தாழ்ச்சியுற்றவர்களை
இழிவுபடுத்துவதில்
எல்லோரும்
தொடர்புபடுகிறார்கள்.
ஏதெனுமொரு விதத்தில்
பொதுமைப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment